ஹோம் /திருச்சி /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

மின்தடை

மின்தடை

திருச்சி மாவட்டம் தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால்,  நாளை (சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை(சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி, கட்டப்புளி, சீதக்காடு, கருப்பம்பட்டி, புளியஞ்சோலை, விசுவை தெற்கு, வடக்கு, வலையப்பட்டி, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ரெட்டியாப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று துறையூர் கோட்டசெயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruchirappalli S22p24