Home /trichy /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மின்தடை

மின்தடை

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சி மாவட்டம் வாளவாடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி மாவட்டம் வாளவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சை துணை மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று வாளவாடி துணை மின்நிலையத்தின் சார்பில், தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வேலாயுதபுரம், கீழப்பெருங்காவூர், மேலப்பெருங்காவூா், தண்டாங்கோரை, திருமணமேடு, பச்சாம்பேட்டை, டி. வளவனூா், மேலவாளாடி, கீழவாளாடி, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், சிறுமருதூா், எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகங்கநல்லூா், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆா். ஆா் வளவனூா், பல்லவபுரம், புதூா் உத்தமனூா், வேளாண்பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி