முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2022)

திருச்சி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2022)

X
திருச்சி

திருச்சி இன்றைய செய்திகள்

Trichy District News : திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு மற்றும் செய்திகள்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் வானிலை நிலவரத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 32.9 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 23.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக உள்ளது.

திருச்சியில் திறந்தவெளி நூலகத்தின் குறைபாடு பற்றி திருச்சி செய்தியாளர் மணிகண்டன் தரும் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.

1. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில் தற்போது, திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் இக்குழு நடத்திய விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமஜெயம், 2016ம் ஆண்டு ‘திருச்சி லீக்’ எனும் பெயரில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஆசைப்பட்டதாகவும், இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனால், ராமஜெயத்திற்கும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில், திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் ராமஜெயத்திற்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்..!

2. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள், பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சமயபுரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் நேற்று இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் இதுபோன்ற புகார்கள் இனி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் எச்சரிக்கை விடுத்தார்.

3. கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்களை வான் நுண்ணறிவு பிரிவு துறையினர் சோதனை செய்தபோது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவில் 162 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு எட்டரை லட்சத்திற்கும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

4. திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்புரமணியன் திருச்சியில் வரும் ஆண்டில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வரின் ஆலோசனைப் பெற்று அறிவிக்கப்படும் என்றும், தமிழகத்தில் 708 நகர் நலவாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்

5. திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த சிறிது நேரத்திலேயே கணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 86 வயதான சம்பூர்ணத்தம்மாள் என்ற மூதாட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது கணவரான 91 வயதான கிருஷ்ணன் உயிரிழந்ததுள்ளார். இறப்பிலும் இணைப்பிரியாத தம்பதி என அப்பகுதியினர் நெகிழ்ந்தனர்.

6. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரகம்பி பகுதியில் பொதுமக்கள் நடைபாதையை வனத்துறை தடுப்புகள் வைத்து மூடிவிட்டதாகக் கூறி அதனை அகற்ற கோரிக்கை விடுத்து பெரகம்பி பொதுமக்கள், மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

7. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முக்கண்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற 44 வயது நபர் நேற்று மாலை தனது தோப்பிற்கு தேங்காய் பறிக்கச் சென்றபோது சில தேங்காய்கள் அருகே உள்ள ஒரு கிணற்றில் விழுந்ததால் அதனை எடுப்பதற்காக கிணற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் செல்வத்தின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    8. திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் இரட்டை ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு அளித்தார்.

    First published:

    Tags: Local News, Trichy