ஹோம் /திருச்சி /

“தற்சார்பு பொருளாதாரத்த இவங்ககிட்டதான் கத்துக்கனும்..” வெற்றிநடைபோடும் திருச்சியில் உள்ள கிராமம்

“தற்சார்பு பொருளாதாரத்த இவங்ககிட்டதான் கத்துக்கனும்..” வெற்றிநடைபோடும் திருச்சியில் உள்ள கிராமம்

X
திருச்சி

திருச்சி

Trichy District News : திருச்சியில் தற்சார்பு பொருளாதாரத்த இவங்ககிட்ட இருந்து மற்ற கிராமங்கள் கத்துக்கனும்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

”ஒரு கிராமம் ஒரு பண்ணையம் திட்டம்” மூலம் தற்சார்பு பொருளாதாரத்திற்கு முதல் படி எடுத்து வைத்து வெற்றி நடை போடுகிறது திருச்சியில் உள்ள நாவலூர் குட்டப்பட்டு கிராமம்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஒரு கிராமம் ஒரு பண்ணையம் என்ற திட்டத்தை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அறிமுகம் செய்தது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தால் பண்ணையம் அமைத்து தரப்படும்.

இந்த பண்ணையில் உள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகளை கிராம மக்களின் ஒரு பிரிவினர் பாதுகாத்து பின்னர் அதில் விளையும் பொருட்கள் மற்றும் பால், இறைச்சி ஆகியவற்றை சந்தைப்படுத்தி அந்த லாபத்தை கிராம முன்னேற்றப்பணிகளுக்கு செலவுசெய்வதே இந்த திட்ட நோக்கம் ஆகும்.

இதன் மூலம் கிராமங்கள் தற்சார்பு பொருளாதார நிலையை அடைவதுடன் அரசிடமிருந்து உதவிகள் கிடைக்குமா என எதிர்பார்த்து இருக்க வேண்டிய தேவையில்லை.

இதையும் படிங்க : திருச்சியில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க ட்ரோன்கள் அறிமுகம்

அதேபோல் ஒருங்கிணைந்த பண்ணையை திட்டம் மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் வருமானமும் பெண்ணின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். தொலைநோக்கு பார்வையில் கிராமத்தையும், கிராம மக்களையும் முன்னேற்றும் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் முன்னெடுத்து முதன் முறையாக இந்த கிராமத்தில் நடத்தி வருகிறார்.

செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு இந்த திட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட போது “முதலில் நாங்கள் மகளிர் சுய உதவி குழு கொண்டு ஒவ்வொரு சுய உதவி குழுவுக்கும் ஒரு பணி என பிரித்து கொடுக்க ஆரம்பித்தோம். இங்கு மீன் வளர்ப்பு நாட்டுக்கோழி ஆடு, மாடு காய்கறிகள் விதை என ஐந்து குழுக்கள் சேர்ந்து பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இயற்கையான முறையில் ரசாயன உரம் இல்லாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி கீரை பழங்கள் உள்ளிட்டவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை நாங்களே விற்பனை செய்கிறோம் இங்குள்ள கிராமத்தை சேர்ந்தவர்களை அதனை வாங்கி செல்கின்றனர்.

அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு எங்களுடைய ஊராட்சிக்கு நாங்கள் வருமானத்தை அதிகப்படுத்திக் காண ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.” என்று பெருமையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மாநகரை விட புறநகரில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. திருச்சி மக்கள் அச்சம்! தரவுகள் கூறுவது என்ன?

இந்த திட்டம் குறித்து அங்கு வேலை செய்யும் பெண்கள் குறிப்பிடுகையில் “முதலில் இந்த திட்டம் எல்லாம் சரியாக வருமா என்ற கேள்வியும் எங்கள் உழைப்பு விணாகுமோ என்ற அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது மெல்ல மெல்ல வருமானம் வர தொடங்கியுள்ளது.

இப்போது தான் எங்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் உத்வேகம் வந்துள்ளது. இனி நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கிராமத்தையும் முன்னேற்றுவோம் நாங்களும் முன்னேறுவோம். ” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கிராமங்களின் முன்னேற்றம் ஒரு தேசத்தின் முன்னேற்றம். பெரிய கனவை நோக்கிய சிறிய அடியை எடுத்துவைத்துள்ள இந்த கிராமத்திற்கும் இதன் தொடக்கப்புள்ளியாக செய்லபட்ட திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டுக்கள். விரைவில் தற்சார்பு பொருளாதாரத்தால் தமிழ்நாடே தன்னிரைவு அடைய பேராசை எழுந்துள்ளது. நிச்சயம் அதுவும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

First published:

Tags: Local News, Trichy