அங்கன்வாடி மையங்களில் மேயர் திடீர் ஆய்வு.
திருச்சி மாநகராட்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த அங்கன்வாடி மையம் குறைபாடுகளுடன் செயல்படுவதாக புகார் எழுந்தது அதைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பொன்மலைப்பட்டி ரயில்வே பணிமனை முன்பு எஸ்ஆர்எம் யூ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் உள்ள நான் சேப்டி காலிப்பணியிடங்களை சரண் செய்ய வேண்டும், என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் தென்னக ரயில்வேயில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களை படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் நிக்கம்.
திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெற்ற ஐந்து நாட்களே உள்ள நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் பிறப்பித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிமாநிலத்தில் பணியாற்றிய போது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டார தகவல் தெரிவித்தனர்.
குடும்பத்தினரிடம் இருந்து காப்பாற்றும் படி திருநங்கை வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.
திருச்சியைச் சேர்ந்த 50 வயது திருநங்கை ஒருவர் கண்டோன்மென்ட் பகுதியில் சொந்தமாக ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் தனது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டதாகவும் திருநங்கையான தன்னை தந்தை மற்றும் குடும்பத்தினர் புறக்கணிப்பது ஆகும் சொத்துக்களை தர மறுப்பது உடன் தன்னை அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் தன்னை காப்பாற்றும்படி கூறியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக அரியமங்கலம் மலையப்ப நகரைச் சேர்ந்த மதன் என்ற குட்செட் மதன் என்பவரை அரியமங்கலம் போலீஸ் கைது செய்தனர்.மதன் மீது அரியமங்கலம் ,காந்தி மார்க்கெட் ,பொன்மலை, தில்லை நகர், உறையூர், கண்டோன்மென்ட், கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் அருகே மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுகுரல் சப்தம் வந்து கொண்டே இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களின் காதில் விழவே மக்கள் சென்று பார்த்த போது பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்த காவிரி நீர்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது.
இதனை திருச்சி மாவட்ட விவசாயிகள் சாா்பாக முக்கொம்பில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து விதை நெல்,மலா்கள் தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சு.
திருச்சியில் ரயில்வேயின் DREU மாநாட்டில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
தமிழகத்தின உரிமை சார்ந்த விஷயங்களை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
செய்தியாளர் -
என்.
மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.