முகப்பு /திருச்சி /

திருச்சியில் சுகாதாரத்துறையின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி.!

திருச்சியில் சுகாதாரத்துறையின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி.!

X
பேரவை

பேரவை கூட்டம்.

Trichy | திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான சுகாதார பேரவை அமைக்கப்பட்டு பேரவை கூட்டங்களில் 406 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சி அரங்குககளை பார்வையிட்டு சுகாதார பேரவை கூட்டத்தை ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நடத்தப்பட்ட இப்பேரவையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதார மற்றும் அதன் தொடர்புடைய பள்ளிக்கல்வித்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற அரசு துறை சார்ந்த நிர்வாகிகள் பொது மக்களின் வாழ்விற்கான தேவைகளை நேரடியாக மக்களிடம் இருந்து கேட்டு அறிந்து கோரிக்கைகளை தீர்வு காணும் வகையில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் மேலும் மாற்றுத்திறனாளிகள் பழங்குடியினர் பெண்கள் இளைஞர்கள் போன்றவர்களின் தனிப்பட்ட தேவைகளை முன்னிலைப்படுத்தும் தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான சுகாதார பேரவை அமைக்கப்பட்டு பேரவை கூட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2022 மாதங்களில் நடத்தப்பட்ட 406 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வட்டராவில் அளவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழிக்கப்பட்ட தீர்மானங்கள் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பேரவையின் ஒப்புதலோடு மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்த திட்ட சுகாதார அமைப்பின் செயல்பாடுகளை மக்கள் நன்கறிந்து பயன்பெறவும் சுகாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளை பங்களிப்பவர்களாகவும் வழி வைக்கிறது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் இணை இயக்குனர் லட்சுமி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Trichy