ஹோம் /திருச்சி /

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் இரும்பு மிச்சங்களை மீண்டும் பயன்படுத்த திட்டம்.. கலெக்டர் தகவல்..

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் இரும்பு மிச்சங்களை மீண்டும் பயன்படுத்த திட்டம்.. கலெக்டர் தகவல்..

X
திருச்சி

திருச்சி கொள்ளிடம் பாலம்

Trichy District News : கொள்ளிடம் பழைய இரும்பு காரிடார்கள் உய்யக்கொண்டான் கால்வாயில் மீண்டும் பயன்படுத்த  மாவட்ட ஆட்சியர் திட்டம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

ஆங்கிலேயர்களால் 1928ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. 792 மீ நீளத்தில் 24 தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு தடுப்புகள் ராட்சத இரும்பு கர்டர்களால் அமைக்கப்பட்டது.

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் மைய பாலமாக 80 ஆண்டுகளாக கம்பீரமாக நின்றது கொள்ளிடம் இரும்பு பாலம். பின்னர் பாலம் வலுவிழந்ததால் 2007-ம் ஆண்டு முதல் இந்த பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு இந்த பாலத்தின் அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பாலத்தை போல புதிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. புதிய பாலம் அமைக்கப்பட்ட போதும் இந்த இரும்பு பாலம் இடிக்கப்படாமல் அப்படியே காட்சி பொருளாக விட்டு விடப்பட்டது.

இதையும் படிங்க : திருச்சி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்..!

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.16-ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து வெள்ளத்தில் பழைய இரும்பு பாலத்தின் 18,19 வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கூட இரண்டு தூண்கள் சரிந்து கீழே விழுந்தன.

இதையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலும் இடிக்கும் பணிகள் ரூ.3.22 கோடி செலவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலம் இடிக்கப்படும்போது அதிலிருந்து அகற்றப்படும் ராட்சத இரும்பு கர்டர்கள் ஒப்பந்ததாரரிடம் இருந்து பெறப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத் துறையால் சேமிக்கப்பட்டு, பின்னர் பொது ஏலத்தில் விடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்

ஆனால் இந்த பாலத்தை பொறுத்தமட்டில் அதன் இரும்பு கர்டர்கள் வலுவுடன் இருப்பதாக கருதப்படுவதால், இந்த இரும்பு கர்டர்களை தனிநபருக்கு பொது ஏலம் விடுவதற்கு பதிலாக, மாநகராட்சி அல்லது நீர்வள ஆதாரத்துறை இடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர் இந்த கர்டர்களை பயன்படுத்தி உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆங்காங்கே இரும்பு பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில். பழைய இரும்பு பாலத்தின் மிச்சங்களை உய்யக்கொண்டான் கால்வாயில் பல இடங்களில் குறுக்கே பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Trichy