நாம்சுவாசிப்பதற்குத்தேவையானஆக்சிஜனைவழங்கும் இயற்கையின் கொடை. நாம் வாழும்சூழலைதீர்மானிப்பவை இம்மரங்களே! இவ்வுலகில்ஓரறிவுதொடங்கி ஆறறிவு மனிதன் வரை வாழ்வதற்கு ஏற்ப தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவை மரங்கள் தான்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் மனிதனின் தேவைகளுக்காக ஒரு இடத்தை கைப்பற்றும் பொழுது அவ்விடத்தில் உள்ள மரங்கள் அடியோடு வெட்டப்படுவது நம் அடுத்த தலைமுறையை வேரோடுஅறுப்பதற்குசமமாகிபோகின்றது.
இத்தகையசூழலைதவிர்ப்பதற்காகவும், மாற்று வழி ஏற்படுத்தும் வகையிலும் வேளாண் துறையினர் பல்வேறுமுயற்சிகளுக்குபிறகு பல ஆண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மரத்தைவெட்டுவதைகாட்டிலும்,அதனைகுறிப்பிட்ட முறையில் வேருடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு அதற்கு உயிர் தர முடியும் என்ற தீர்வை கண்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்இடதேவைக்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பக்க நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்கு இருந்த வேம்பு,புளிய மரம்உள்ளிட்ட 10 மரங்கள் வேருடன் பிடுங்கி ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் நடும் பணியை மேற்கொண்டது திருச்சி மாவட்ட நிர்வாகம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேருடன்பெயர்த்தெடுக்கப்பட்டமரங்கள்பொக்லைன்இயந்திரத்தின் உதவியுடன் சங்கிலிகள் கட்டப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தேர்தல் ஆணையஅலுவலகத்திற்குக்கொண்டு செல்லப்பட்டுஜேசிபிஉதவியுடன் அங்கு ஏற்கனவே தோண்டி தயாராக வைக்கப்பட்டுள்ள குழியில்நடப்பட்து.
மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துள்ள இத்தகைய முயற்சி சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பைப்பெற்றுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Trichy