Home /trichy /

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: திருச்சியில் வேளாண் பொருட்களைப் பதப்படுத்தும் கிடங்குகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: திருச்சியில் வேளாண் பொருட்களைப் பதப்படுத்தும் கிடங்குகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சியில், குறைந்த விலையில் வேளாண் பொருட்களை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை அதிக விலைக்கு சந்தையில் விற்பனை செய்யும் வகையில் பதப்படுத்தும் தொழில் சாலைகள் அமைக்கப்படுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர், அரசலூர், பிடாரமங்கலம், திருச்செந்துறை, எம்.புத்தூர் ஆகிய இடங்களில் வாழைக்காக பதப்படுத்தும் மையம் அமைக்கப்படுகிறது.

    மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய இடங்களில் வெங்காயத்திற்காகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயன்பாட்டாளர் பயன்பாடு மற்றும் சேவை அடிப்படையில் குறைந்தபட்ச வாடகை தொகையாக கிலோவிற்கு ரூ.0.20 பைசா மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்படுகிறது.

    இந்நிலையத்தினை வாடகைக்கு எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் காய்கறி பழ வணிகர்கள் ஆகியோர் கீழ்காணும் முகவரியில் செயல்படும் திருச்சி விற்பனைக்குழுவின் தலைமையலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விபரங்களுக்கு, செயலாளர், திருச்சி விற்பனைக்குழு, 199, மதுரை ரோடு, திருச்சி - 08 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி