திருச்சி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் விடுதிகள் வரும் 30ம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் கட்டாயம் மூடப்படும் என்று ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் தனி நபர் ஆகியோரால் மகளிர் தங்கும் விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும்.
உரிமம் பெறாத விடுதிகள்
https://tnswp.com என்ற இணையதளம் வழியாக, உரிய ஆவணங்களுடன் வருகின்ற 30.08.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளவும் என்று ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.