Home /trichy /

முழுவதும் மண்பாண்ட சமையல்: விதவிதமான உணவுகள்- திருச்சியைக் கலக்கும் செல்லம்மாள் உணவகம்

முழுவதும் மண்பாண்ட சமையல்: விதவிதமான உணவுகள்- திருச்சியைக் கலக்கும் செல்லம்மாள் உணவகம்

செல்லம்மாள்

செல்லம்மாள் மண்பாண்ட உணவகம்

மற்ற உணவகங்களில் என்னென்ன உணவு இருக்கு என்று சொல்லி ஆர்டர் எடுப்பார்கள்! ஆனால் இங்கு எல்லாவற்றையும் நம் முன்னாடி கொண்டு வந்து காண்பித்து ஆர்டர் எடுக்கிறார்கள்.

பொதுவாக உணவகங்களில் என்னென்ன உணவு உள்ளது என்று சொல்லி ஆர்டர் எடுப்பார்கள். ஆனால் இங்கு எல்லாவற்றையும் நம் முன்னாடி கொண்டுவந்து காண்பித்து ஆர்டர் எடுக்கிறார்கள்.

எவர் சில்வர் பாத்திரங்களின் எழுச்சிக்கு பிறகு மண்பாண்ட சமையல் முறையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்ட நிலையில் மண்பாண்ட சமையல் மீதான ஈர்ப்பு தற்போதைய தலைமுறைக்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். தற்போதைய நவீன யுகத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள், நான்ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தான் சமையல்கள் நடக்கின்றன.

வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் ஹோட்டல்களில் சொல்லவா வேண்டும்? ஆனால் அந்த நிலையிலும்கூட அனைத்து உணவுகளையுமே மண்பாண்டங்களில் செய்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர் திருச்சியிலுள்ள செல்லம்மாள் மண்பானை உணவகத்தினர்.

மண்பாண்டங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள உணவுகள்


செல்லம்மாள் மெஸ்ஸில் சென்று அமர்ந்தால் வாழை இலை விரிக்கப்பட்டு, சிறிய மண் குவளைகளில் பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள், கீரைகள் என்று கொண்டு வந்து காண்பிக்கின்றனர்.

அதில் நமக்கு பிடித்தவற்றை சொன்னால் அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட நமக்கு வந்துவிடும். குறிப்பாக வாழைப்பூ பொரியல், வல்லாரை, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு போன்றவை கிடைக்கின்றன. குழம்பு வகைகளில் பருப்பு குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, கீரை குழம்பு, மோர் குழம்பு என பல வகைகள் இருக்கின்றன. அத்தனையுமே மண்பானைகளில் சமைத்து மண் குவளைகளில் பரிமாறப்படுகின்றன.

இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் அனைத்துமே, சொந்தமாக ஆட்டிய எண்ணெயில் சமைத்து வாழை இலையில் பரிமாறுவதால் எப்பொழுதுமே இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

தினமும் ஐந்து வகையான கீரைகள், ஏழு வகையான காய்கறி கூட்டு, பொரியல் வகைகள் 8 வகையான குழம்புகள் என அனைத்தும் காலையில் இருந்தே செய்ய தயாராகின்றன. மசாலா அரைப்பதற்கு அம்மிகளையும், உரல்களையும் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்வுடன் இந்தக் கடைக்கு வந்துசெல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி