Home /trichy /

Trichy | பல வருடங்களாக திருச்சியை கலக்கும் பாதாம் பால் கடை... நீங்க டேஸ்ட் பண்ணியிருக்கீங்களா?

Trichy | பல வருடங்களாக திருச்சியை கலக்கும் பாதாம் பால் கடை... நீங்க டேஸ்ட் பண்ணியிருக்கீங்களா?

திருச்சி

திருச்சி பாதாம் பால் கடை

Trichy | திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பல வருடங்களாக செயல்பட்டுவரும் பாம்பே பாதாம் பால் கடை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பாம்பே பாதாம் பால் கடை காலை முதல் நள்ளிரவு வரை இயங்குகிறது.

மேலும் காலை நேரத்தில் சுவையான லெஸ்ஸி, பாதாம்கீர், ரோஸ் மில்க் ஆகியவை கிடைக்கும். மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூடான பாதாம் பால் இங்கு கிடைக்கிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாட்டால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இந்த கடை இயங்கி வருகிறது. இந்த பாதா பாலின் சுவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடை உரிமையாளர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், 30 வருடங்களுக்கு முன்னால் பல சிரமங்களுக்கு இடையில் இந்த கடையை தொடங்கியதாகவும் கூறினார். மேலும் ஆரம்பத்தில் சாலையோர கடையாக தான் இருந்தது.

பாலின் சுவையாலும் தரத்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகமான காரணத்தால் கடையை விரிவுபடுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் தினசரி 150 லிட்டர் வரை பால் உபயோகிப்பதாகவும் பண்டிகை காலங்களில் 200 லிட்டருக்கு மேல் பால் விற்பனையாகுமாம். மேலும் சுத்தமான கறவை பால் மட்டும் தான். பாலில் ஒரு துளி கூட நீர் சேர்க்காமல் கறந்த ஒரு மணி நேரத்தில் பண்ணையிலிருந்து உடனடியாக கடைக்குக் கொண்டு வரப்பட்டு அதில் பாதாம் பால் தயாரிக்கின்றனர்.

ராஜஸ்தானிலிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குங்குமப்பூ தூள் இதில் பயன்படுத்தப்படுவதாகவும் கொதிக்கும் நிலையில் உடைத்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை தூவி கிளறி விடும் போது அந்தப் பால் சுண்டி சுவையான பாதாம்பால் தயாராகிவிடும். தினமும் காலை முதல் அதிகாலை 2 மணி வரையும் பால் விற்பனையாகும் என்றும் குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று எல்லாத் தரப்பு மக்களும் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி