Home /trichy /

திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி.. விரைவில் போக்குவரத்து மாற்றம்..

திருச்சி காவிரி பாலத்தில் சீரமைப்பு பணி.. விரைவில் போக்குவரத்து மாற்றம்..

காவிரி

காவிரி பாலம்

Trichy District : காவிரி பாலம் அடிக்கடி சேதமடைவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ்கள், வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன. சில ஆண்டுகளாக பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது.

இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ரூ.1 கோடியே 35 லட்சமும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சமும், செப்டம்பரில் ரூ.15 லட்சமும், 2018-ம் ஆண்டு நவம்பரில் ரூ.80 ஆயிரமும் செலவிடப்பட்டது.

திருச்சி காவிரி பாலம்


மேலும் கடந்த ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, பாலம் கட்டப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளாலும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியிருப்பது தெரியவந்தது. இதனால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை முடிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி காவிரி பாலம்


மேலும் காவிரி பாலம் அடிக்கடி சேதமடைவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேன்.என். நேரு விரைவில் இப்பாலம் முழுமையாக சீரமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் பராமரிப்பு பணிக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு ஏற்றபடி, ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

மேலும், காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளநிலையில் சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பாலத்தின் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததுடன் அருகிலியே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி