திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில், விவசாயத்தை பற்றி பேசிய 4 வயது சிறுவன், அங்கிருந்த மக்களை பார்த்து கேட்ட கேள்விகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சி தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் இந்த அரசு பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான பேச்சுத் திறன் வளர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் பேச்சுப்போட்டி ஆகும். மேடை பயம் இல்லாமல் மனதில்நினைத்ததை தெளிவான பேச்சில் வெளிப்படுத்த சிறுவர்களை தயார் செய்வதே இதன் நோக்கம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் 4 வயது சிறுவன் விவசாயத்தைப் பற்றி பேசியது காண்போரை நெகிழ வைக்கிறது.
ALSO READ | 108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு.. திருச்சி மக்களே மிஸ் பண்ணீடாதீங்க!
சிறு வயதிலேயே விவசாயத்தின் மகத்துவம் அறிந்த சிறுவன் ஆர்த்விக் அமுதன் பேசிகையில் “நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? உங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் தான் என்னை மறந்து விட்டு பீட்சா பர்கர் என்று போயிட்டீங்களே. நான் தான் விவசாயி. இந்த நாட்டின் முதுகெலும்பு. என்னை அழிச்சிட்டு கட்டு கட்டான பணத்தையா சாப்பிட போறீங்க, விவசாயத்தை மறந்துடாதீங்க, விவசாயியை மறந்துடாதீங்க” என்று தன் மழலை பேச்சில் கம்பீரமாக உணர்ச்சி பிழம்பாகபேசினான்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, School student, Trichy