Home /trichy /

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழிப்படிப்புகளுக்கு சேர்க்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழிப்படிப்புகளுக்கு சேர்க்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை வகுப்புகளான எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகளுக்கு தொலை நிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் வழி படிப்புகளுக்கான சேர்கை துவங்கியுள்ளது.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழிப்படிப்புக்கான சேர்க்கை தொடங்கியது.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலை நிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் வழியாக கல்வி படிக்க இந்தாண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டும் மாணவர் சேர்க்கைக்கான புதிய வகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், புதிதாக பல்வேறு படிப்புகளுக்கும் சேர்க்கைளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மேலாண்மை வகுப்புகளான எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலை நிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக சேர்கை துவங்கியுள்ளது.

    கடந்த ஜூலை 27ம் தேதி முதல் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்த படிப்புகளை விரும்பும் மாணவ-மாணவிகள் உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 83001-84010 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளா் லெ. கணேசன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி