Home /trichy /

Trichy News : திருச்சியும் ராணி மங்கம்மாளும்... இந்த கட்டிடங்களின் பின்னணியில் உள்ள வரலாறு தெரியுமா?

Trichy News : திருச்சியும் ராணி மங்கம்மாளும்... இந்த கட்டிடங்களின் பின்னணியில் உள்ள வரலாறு தெரியுமா?

திருச்சி

திருச்சி - ராணி மங்கம்மாள் .

Trichy Latest News : திருச்சியில் ராணி மங்கம்மாவின் கோட்டைகள் மதில் சுவர்கள் அரண்மனைகள் இன்றும் அவர் புகழை பாடிக் கொண்டுள்ளன.

அரசியல் அறிவும், உலகியல் புரிதலும், ஆட்சித்திறனும் கொண்டவராக திகழ்ந்தவர் ராணி மங்கம்மாள். தென் தமிழகத்தில் அவர் ஆட்சி செய்த நிலப்பரப்பின் பல்வேறு இடங்களில் அரண்மனைகள், குளங்கள், சாலைகள், மற்றும் பாலங்கள் அமைத்தார்.

மதுரை மற்றும் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது அவர் கட்டிய எண்ணற்ற கட்டிடங்கள், கோட்டைகள் இன்றும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருச்சியில் டவுன்ஹால், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருந்த அரண்மனை, அருங்காட்சியகமாக செயல்படும் கொலு மண்டபம், காவிரி கரையில் உள்ள குளியல் அறை போன்றவை இன்னும் ராணி மங்கம்மாள் பெருமையை பறைசாற்றி வருகிறது.

ராணி மங்கம்மாள் புகழ்பாடும் கட்டிடங்கள்..


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - ராணி காலத்தில் அது அரண்மனை.

உயர் கொண்டான் கரையில் உள்ள அரண்மனையானது யானைகள் மற்றும் குதிரைகள் நிறுத்துமிடம் விருந்தினர்கள் தங்கும் இடங்கள் இன்னும் பல அமைப்புகளோடு மிக பிரம்மாண்டமான கட்டப்பட்ட அரண்மனையாகும். பிறகு அது காலப்போக்கில் ஆங்கிலேயரின் வருகைக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டது . தற்போது பழமை மாறாமல் அரசு இதனை புதுப்பித்து வருகிறது.

ராணி மங்கம்மாள் புகழ்பாடும் கட்டிடங்கள்..


குளியலறை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் ஓயாமரி சாலையில் அமைந்திருப்பது ராணி மங்கம்மாளின் குளியலறை என கூறப்படுகிறது. அது தற்போது அரசு சார்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ராணி மங்கம்மாவின் நினைவு கூறும் விதமாக அவர்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ராணி மங்கம்மாள் புகழ்பாடும் கட்டிடங்கள்..


ராணி மங்கம்மாள் புகழ்பாடும் கட்டிடங்கள்..



மதில் சுவர்கள்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே பட்டவத்துரோடு பகுதியில் அமைந்துள்ள மதில் சுவர்கள் ராணி மங்கம்மாவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாகும் தற்போது அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் திருச்சி மாவட்டத்தில் ராணி மங்கம்மாவின் நினைவுகள் கூறும் விதத்தில் பல்வேறு கட்டிடங்களை அரசு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி