கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு மார்ச் 27ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இயக்கப்பட்டு வந்த சர்வதேச விமான சேவைகள் தற்போது படிபடியாக மீட்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் உள்நாட்டு விமான சேவையாக 8 விமானங்களும், வெளிநாட்டு விமான சேவையாக 13 விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் அதிக வெளிநாட்டு பயணிகளை வருகையில் திருச்சி விமான நிலையம் 11வது இடத்தில் உள்ளது.
துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைக்காட்டிலும் தற்போது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பயணிகள் அதிகரிப்பால் ஒரு புறம் திருச்சி விமானநிலையத்துக்கு அந்நிய செலவாணி வருவாய் அதிகரித்தாலும் மற்றொரு புறம் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்களால் இந்தியா நாட்டின் பொருளதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் ரூ.34.7 கோடி மதிப்பிலான 157 கிலோ தங்கம், ரூ.1.29 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள், ரூ.3.70 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட வகையில் ரூ.9 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் இது கணக்கிற்காக கொடுக்கப்பட்ட தொகையாகும். இன்னும் கோடிக்கணக்கில் வெளிவராத கணக்கு உள்ளது எனவும், மேலும் இச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என விமான நிலைய ஆர்வலர்களிடையே கேள்வி எழுப்பபட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy