முகப்பு /திருச்சி /

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயில் சேவை மேலும் 2 மாதம் நீட்டிப்பு..

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயில் சேவை மேலும் 2 மாதம் நீட்டிப்பு..

ரயில் சேவை.

ரயில் சேவை.

Trichy - Ahmedabad weekly Train : திருச்சி - அகமதாபாத் இடையிலான வாராந்திர ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி - அகமதாபாத் இடையிலான வாராந்திர ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் காலை 9:30 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்:09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப்ரவரி 2, 9, 16, 23 மற்றும் மாா்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்பட இருக்கிறன. இதேபோல் மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5:45 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Southern railway, Trichy