திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). தமிழ்நாடு விவசாய இயக்கத்தின் மாநிலச் செயலாளரான இவர் கடந்த, ஏப்ரல் மாதம் 29ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவுச் செய்து, 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகரத்தில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த, 17 வயது மாணவன் ஒருவன் சரணடைந்தார்.
அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சண்முகசுந்தரத்தின் உறவினருமான அறிவழகன், அவரது தம்பி பால்ராஜ், அறிவழகனின் சகோதரி மகன் சண்முகவேல், இவரது நண்பர்கள் இளவரசன் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, அறிவழகன் சனமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, பஞ்சமி நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சண்முகசுந்தரம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் குடும்பம் உள்பட சுமார், 20 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் அதற்கு சண்முகசுந்தரம் தடையாக இருந்து வந்திருக்கிறார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீருக்காக அறிவழகன் உள்ளிட்ட கிராம மக்கள் சொந்த செலவில் போர்வெல் அமைக்க திட்டமிட்டு, எந்திரத்தின் மூலம் போர்வெல் போட்டுள்ளனர். இதனை அறிந்த சண்முகசுந்தரம், போர்வெல் போடும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அறிவழகனின் சகோதரி மகன், வாத்தலையை சேர்ந்த சண்முகவேல் அவரது நண்பர்களான புள்ளம்பாடி அருகே உள்ள திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன், 17 வயது சிறுவன் ஆகிய, 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்று அரிவாள், வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.தப்பிச்சென்ற, 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி, கொலைச் சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்ததுள்ளனர்.
Also see... தி கேரளா ஸ்டோரி.. வெளியிட்டால் பிரச்னை? - தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
மேலும், சிறுவனை கொலையில் ஈடுபடுத்தியதும், அவனை சிறுவன் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரண்டைய செய்ததிலும் இவர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.அதையடுத்து, கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிறுகனூர் போலீசார், சண்முகவேல், இளவரசன், அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder case, Trichy