திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட விரிவாகத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் மறுநடவு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, அஸ்ஸாம் போன்ற பகுதிகளில், மரம் மறுநடவு செய்வதில் அங்குள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய தேவைக்களுக்காக வெட்டப்படும் மரங்களை மறுநடவு செய்யும் புதிய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த வேம்பு, புளிய மரங்கள் வெட்டப்பட்டன. மாவட்ட மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆட்சியர் அலுவலகத்திலேயே மரங்கள் வெட்டி வீழ்த்தப்படலாமா? என்ற கூக்குரல்கள் எழுந்தன.
அதையடுத்து, ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவின்பேரில், குமுளூர் வேளாண் பல்கலை பேராசிரியர் விஜய் தலைமையிலான குழுவினர் மரங்களை மறுநடவு செய்து அசத்தியுள்ளனர். மரங்களை மறுநடவு செய்வதற்கு ஏதுவாக மரத்தின் தேவையற்ற கிளைகள் அகற்றப்பட்டன. எந்திரங்கள் உதவியுடன், வேர்களை சீர் செய்து, 6 அடி அகலத்தில், 5 அடி பள்ளம் தோண்டி மரங்களை, அருகிலுள்ள அலுவலக வளாகத்தில் நேராக நட்டனர்.
ஒரு மாத காலத்திற்கு நீர் பாய்ச்சி, தொழு உரமிட்டு பராமரித்தால் மீண்டும் மரம் நன்கு துளிர்த்து வளருமாம். மரங்கள் மீது காதல் கொண்டு, மறுநடவு செய்த மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. மரங்களை மறுநடவு செய்ய கூடுதல் செலவினமாகும் என்பதால் பலரும் மறுநடவு செய்ய முன் வருவதில்லை.
எனவே, மறுநடவு செய்ய விரும்புவோர்களுக்கு தமிழக அரசு நவீன இயந்திரங்களை இலவசமாக வழங்கி, மரங்கள் மறுநடவை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால், மழை, புயல், சூறாவளி காற்று போன்ற இயற்கை இடர்பாடு காலங்களில், பெருமளவு முறிந்து விழும் மரங்களை மறுநடவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் துளிர் விடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy