ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க

திருச்சி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின்தடையா? - செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மணப்பாறை இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (06-12-2022) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி) தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இதேபோல மூக்கரெட்டியப்பட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, இனாம்ரெட்டியபட்டி, பி.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, குளத்தூரம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரியஅணைக்கரைப்பட்டி, முகவனூர், ஆவாரம்பட்டி, சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை, வலையப்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy