முகப்பு /திருச்சி /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்- உங்க ஏரியா இருக்கா பாருங்க...

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்- உங்க ஏரியா இருக்கா பாருங்க...

மின்தடை

மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 20) திருச்சியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சுயதொழிலில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி- ஆச்சர்யப்படுத்தும் திருச்சி பெண்

இதேபோல, வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனவும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Local News, Tiruchirappalli S22p24