ஹோம் /திருச்சி /

பொங்கல் தொகுப்பு பெற ரேஷன் கடைகளில் டோக்கன்.. திருச்சியில் விநியோகம்

பொங்கல் தொகுப்பு பெற ரேஷன் கடைகளில் டோக்கன்.. திருச்சியில் விநியோகம்

டோக்கன் விநியோகம்.

டோக்கன் விநியோகம்.

Tiruchirappalli News : பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை 6 மணி முதல் 8 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் தொகுப்பை பெற பொதுமக்களுக்கு டோக்கன்  விநியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது எனஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோல் இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான நியாயவிலைக் கடைகளில்கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான டோக்களைவழங்கினர்.

First published:

Tags: Pongal, Pongal 2023, Pongal festival, Pongal Gift, Trichy