ஹோம் /திருச்சி /

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் பராமரிப்பின்றி காட்சிப்பொருளான கழிவறைகள்... மாநகராட்சி கவனிக்குமா?

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் பராமரிப்பின்றி காட்சிப்பொருளான கழிவறைகள்... மாநகராட்சி கவனிக்குமா?

திருச்சி

திருச்சி

Trichy Race Course Road : திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிவறைகள் பராமரிப்பின்றி காட்சிப் பொருளாகி உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியின் முக்கிய சாலையான ரேஸ்கோர்ஸ் பகுதியில்அண்ணா விளையாட்டு அரங்கம், சுற்றுப்பகுதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .

ரேஸ் கோர்ஸ் சாலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் திறந்தவெளி உடற்பயிற்சி, சிறுவர்களுக்கான திறந்தவெளி விளையாட்டு பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.

இவர்களுக்காக  மாநகராட்சி சார்பில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது.

இதையும் படிங்க:   திருச்சியில் பில்லர் இல்லாமல் கட்டப்பட்ட அதிசய வீடு.. திரும்பி பார்க்க வைக்கும் இதன் ரகசியம் என்ன?

அந்த கழிப்பிடங்கள் தற்போது சரியாக பராமரிக்கப்படாமல் குப்பை கூளங்களாகவும், செடி கொடிகள் வளர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாநகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். இரவு மற்றும் பகல் நேரங்களில் பயன்படுத்தும் விதமாக வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy