முகப்பு /செய்தி /திருச்சி / குட்டி நாயை சுட்டுக்கொன்ற டாக்டர் கைது: திருச்சியில் பயங்கரம்

குட்டி நாயை சுட்டுக்கொன்ற டாக்டர் கைது: திருச்சியில் பயங்கரம்

திருச்சி

திருச்சி

திருச்சி பாலக்கரையில் சாலையில் திரிந்த குட்டி நாயை சுட்டுக்கொன்ற டாக்டர் கைது செய்யப்பட்டார். 

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது ஹசன் ஷாகிப் (வயது 46). இந்திய மருத்துத்தில் ஒன்றான யுனானி டாக்டராக இருந்து வருகிறார். அதே பகுதியில் கிளினிக்கும் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.

இந்நிலையில்,  தான் வைத்துள்ள ஏர் பிக்செல் துப்பாக்கியை கொண்டு அந்த பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை சுட்டுக் கொன்று வந்துள்ளார்.

அப்பகுதியினர் இதனை பலமுறை கண்டித்தபோதும், டாக்டர் சையது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  அதேபோல் ஆசிட் கலந்த குடிநீரை வைத்து ஏராளமான நாய்களையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று  காஜாப்பேட்டை பகுதியில் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த  குட்டி நாய் ஒன்றை தனது ஏர் பிக்செல் துப்பாக்கியால் டாக்டர் சையது ஈவுஇரக்கமின்றி கொடூரமாக சுட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்... ரிப்போர்ட்டர் போர்வையில் அட்டூழியம்..

top videos

    இதில் அந்த நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானது. இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பிரபு பழனியப்பன் என்பவர் திருச்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யுனானி டாக்டர் சையதுவை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    First published:

    Tags: Crime News