முகப்பு /திருச்சி /

"திருச்சியை தமிழகத்தின் துணை தலைநகராக்குங்கள்" ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

"திருச்சியை தமிழகத்தின் துணை தலைநகராக்குங்கள்" ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

X
மாவட்ட

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

Trichy News | திருச்சி மாநகரின் மேம்பாடு குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியை தமிழகத்தின் துணை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வளர்ச்சி குழுமத்தை சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில், திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மேம்பாட்டு வசதிகள் செய்திட வேண்டும், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் எளிதில் சென்று வர மெட்ரோ அல்லது எலக்ட்ரிக்கல் ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

காவிரி பாலத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும், அரசுக்கு சொந்தமான குளங்களிலும், குட்டைகளிலும் மீன் ஏலம் விடும் நிகழ்வை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

First published:

Tags: Local News, Trichy