ஹோம் /திருச்சி /

கிணற்றில் பாய்ந்த டிராக்டர் | திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் - நவம்பர் 18, 2022

கிணற்றில் பாய்ந்த டிராக்டர் | திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் - நவம்பர் 18, 2022

Tiruchirapalli

Tiruchirapalli Today District News November 18

Today Trichy News | திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 18) முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள் குறித்து தற்போது காணலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

ட்ர்திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 18) முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள் குறித்து தற்போது காணலாம்..

1. கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன், விநாயகர், முருகன் கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை நேற்று தொடங்கினர்.

2. திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை நிலவரப்படி ஒரு கிராம் 4,951 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 39,608.

3. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில், கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஒன்று தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்ததில் அதே ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சதீஷ் என்பவர் உயிரிழந்தார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கிரேன் மூலமாக டிராக்டரையும், சதீஷின் உடலையும் மீட்டனர்.

4. மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செவலூர், பொடங்குபட்டி, வீரப்பூர்,கஸ்தூரிபட்டி என மணப்பாறை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் நாலை காலை 9.45ல் இருந்து மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க : திருச்சி மாவட்டத்தில் நாளை 70 இடங்களில் மின்தடை.... உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணுங்க!

5. தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு மாநகரில் நாளை காலை நடைபெறவுள்ளது. அகில இந்திய அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் தேசிய அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் 27 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன.

6. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.81 லட்சம் காணிக்கை வசூலானது. 2 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றும் நிலையில் இந்த மாத உண்டியல் காணிக்கையாக ரூ.81 லட்சத்து 50 ஆயிரத்து 390 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 771 கிராம் தங்கமும், 3 கிலோ 451 கிராம் வெள்ளியும் கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

7. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மணப்பாறையில் பல்வேறு பகுதிகளில் விதிமீறி மது விற்பனை செய்தவர்கள், மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.

8. திருச்சி மாவட்டம் முசிறி அருகே, 16 வயது சிறுமிக்கு பீர் வாங்கிக் கொடுத்து ஐந்து இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருந்த நிலையில், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவவிட்ட, 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

9. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 103.06க்கும், டீசல் ரூ. 94.69க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

10. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து நகை, 50 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

11. வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையாக 31.1 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 22.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy