Home /trichy /

Trichy News : ஓடத்துறை பாலத்தின் அவல நிலை... சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறியுள்ளதாக புகார்..

Trichy News : ஓடத்துறை பாலத்தின் அவல நிலை... சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறியுள்ளதாக புகார்..

ஓடத்துறை

ஓடத்துறை சுரங்கப்பாதை

Trichy Latest News : ஓடத்துறை பாலம் என்பது சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கு ஒரு முக்கியமான பாலம் ஆகும் அது தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

திருச்சியில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று சத்திரம் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்கும் ஒரு முக்கிய பாலமாக விளங்குவது ஓடத்துறைபாலம் தான்.

இந்த பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டது.  சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலையை சென்றடைவதற்கு மிக முக்கிய பாதையாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஓடத்துறை  பால  சுரங்கப்பாதை


இப்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை சுரங்கப்பாதையில் பொதுமக்கள் செல்வதற்கே மிகவும் அச்சப்பட்டு வருவதாகவும், சரியாக பராமரிப்பில்லாமல் இருப்பதால் அந்த இடத்தில்   சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இது குறித்து பலமுறை மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

ஓடத்துறை  பால  சுரங்கப்பாதை


குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் பொது மக்களை மிரட்டி பணம் பறிப்பது, நகை திருடுவது, போதை பொருள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியதால் மாலை 7 மணிக்கு மேல் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே   அச்சம் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஓடத்துறை  பால  சுரங்கப்பாதை


மாநகராட்சியும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சுரங்கப் பாதையை முழுமையாக சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாற்றிட வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . மேலும் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் அப்பகுதியில் நடமாடுவதும் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி