Home /trichy /

மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டையின் சிறப்புகள்..

மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டையின் சிறப்புகள்..

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை

Trichy Malaikottai : திருச்சியை அடையாளப்படுத்தும் பழமை வாய்ந்த மலைக்கோட்டை. இதன் சிறப்புகளை அறிவோமா...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்தாலே மலைக்கோட்டையை காண முடியும். கோட்டையின் நுழைவாயில் இருந்து இரு பக்கமும் கடைகள் வரிசைகட்டி இருப்பதால், இங்கு மக்கள் கூட்டம் எப்போதுமே அலைமோதியவாறே இருக்கும்.  

மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும், அப்படியே மெல்ல படி ஏறினால் தாயுமானவரும், மலை உச்சியிலும் வீற்றிருக்கிறார்  உச்சிப்பிள்ளையார். இவை தவிர, பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம்.
மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழும் மலைக்கோட்டை பிரம்மிக்கத்தக்க வரலாற்றின் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. கோட்டை 500 ஆண்டுகள் பழமையானதாகும்.

தொன்மை வாய்ந்த மிகப்பெரிய பாறை ஒன்றன் மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதியாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 273 அடி உயரம் கொண்டது. அடிவாரத்தில் இருந்து 437 படிகள் மேலே செல்ல ஏற வேண்டும். நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மலைக்கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து  பரிகாரம் செய்வதற்காகவும்,  சுற்றுலாவிற்காகவும் ஆண்டுதோறும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tourist spots, Trichy

அடுத்த செய்தி