Home /trichy /

6 மாதம் மீன்பிடி தொழிலும் 6 மாதம் விவசாயமும் பார்க்கும் திருச்சி கல்லணை மீனவர்கள்..

6 மாதம் மீன்பிடி தொழிலும் 6 மாதம் விவசாயமும் பார்க்கும் திருச்சி கல்லணை மீனவர்கள்..

கல்லணை

கல்லணை மீனவர்கள்

Trichy Kallanai | பல தலைமுறையாக நாங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆறு மாதம் மீன் பிடி தொழிலும், ஆறு மாதம் விவசாயமும் செய்து வருகிறோம் என்கின்றனர் கல்லணை மீனவர்கள்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி   கல்லணை என்று சொன்னாலே இயற்கை அழகும் தண்ணீரும் நம் கண் முன் வந்து போகும். இது திருச்சியின் முக்கியமான சுற்றுலா தளமாகவும் உள்ளது.
கல்லணையை நம்பி பல தலைமுறைகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கல்லணை பகுதியில் அதிகம் உள்ளனர்.
தங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இருந்தாலும் எங்களுக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது என்கிறார்கள் அப்பகுதி மீனவர்கள்.

மீனவர்கள்

பல தலைமுறையாக நாங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆறு மாதம் மீன் பிடி தொழிலும், ஆறு மாதம் விவசாயமும் செய்து வருகிறோம்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 500 கிலோ மீன் கிடைக்கும். ஆண்கள் நாங்கள் மீன் பிடிப்போம் , பெண்கள், எங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்வார்கள்.

மீன்பிடி  தொழிலை நம்பி தான் கல்லணை பகுதியில் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.   திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு மீன் வாங்க வருகை புரிவார்கள் குறிப்பாக ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து கல்லணை பகுதிகளுக்கு மீன் வாங்க வருவார்கள். நாங்கள் மீன் மற்றும் வயல் நண்டுகள் விற்பனை செய்து வருகிறோம்.

சனி, ஞாயிறு புதன் ஆகிய தினங்களில் மீன் வாங்க கூட்டம் அலைமோதும்.  தினசரி பிடிக்கும் மீன்களை அன்றே விற்று விடுவோம் தேக்கி வைத்து விற்பனை செய்ய மாட்டோம்.

மேலும் எங்களுடைய வாழ்வாதாரம் இந்த மீன்களை நம்பி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் 6 மாதம் உணவுக்கும் மற்ற இதர செலவுக்கு மீன் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை நாங்கள் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அடுத்த ஆறு மாதம் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை பிழைப்பை நடத்தி வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக பிள்ளைகளின் பள்ளி படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கி தர கூட சில சமயங்களில் வருவாய் போதாமல் போய்விடுகிறது. இந்நிலையில் நாங்கள் என்ன செய்யவது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி