Home /trichy /

சிறுதொழில் மூலம் சாதிக்கும் திருநங்கைகள்.. மூங்கில் பொருட்கள் முதல் மூலிகை செடிகள் வரை விற்பனை..

சிறுதொழில் மூலம் சாதிக்கும் திருநங்கைகள்.. மூங்கில் பொருட்கள் முதல் மூலிகை செடிகள் வரை விற்பனை..

திருச்சி

திருச்சி - சுயதொழிலில் சாதித்த திருநங்கை.

Trichy Latest News : திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மகளிர் சுய உதவி குழு திட்டத்தின் கீழ் கடையை நடத்தி வரும் திருநங்கை கஜோல் குறித்த தொகுப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஆண்கள், பெண்கள் அல்லாது 3வது பாலினமாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் திருநங்கைகள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது, கேலி செய்யப்படுவது சமூக அவலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களை சமூகம்  ஒதுக்கி வைத்தாலும், அந்த ஒடுக்குமுறைகளை மீறி சில திருநங்கைகள் அரசு பணி மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மகளிர் சுய உதவி குழு திட்டத்தின் மூலமாக  ஐந்து திருநங்கைகள் சேர்ந்து கடையை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் கடையில் பழரசம் மூங்கிலால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், வீட்டு அழகு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.. மேலும் இப்பொருட்களை கல்லூரிகளுக்கு எடுத்துச் சென்றும் சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

திருநங்கை கஜோல்


அதேபோல டிரான்ஸ் கார்டன் என்ற பெயரில்,  மண்புழு உரம் தயாரிப்பு, அலங்கார செடிகள், இயற்கை இடுபொருள் போன்றவை வேளாண் கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு,  தயாரித்து அவற்றை சந்தைபடுத்தி வருகின்றனர்.

திருநங்கை கஜோல்


சுயதொழில் குறித்து திருநங்கையான கஜோல் கூறுகையில்,  “இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் என்றாலே பொதுவாக தவறான தொழில் செய்பவர்கள் எனவும், மக்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள் என்ற பிம்பம் இருந்து வருகிறது. ஆகையால் தான் எங்களை யாரும் மதிப்பதில்லை. குறிப்பாக எங்களில் பலர் சுயமாக வேலை செய்து இந்த சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என பல கனவுகளோடு இருந்தாலும் உதவி கிடைப்பதில்லை.

திருநங்கைகள் தயாரித்த கைவினைப்பொருட்கள்


இந்த சூழ்நிலையில் தான் திருச்சி மாநகராட்சி சார்பாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தியதால் என்னால் சமுதாயத்தில் மதிக்கக்கூடிய ஒரு இடத்திற்கு வர முடிந்தது. என்னை போல் இருக்கும் திருநங்கைகள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு சுய தொழில் தொடங்குவதற்கு உதவினால் திருநங்கைகள் அனைவரும் தவறான தொழிலில் ஈடுபடாமல் சரியான முன்னேற்ற பாதையில் சென்றடைவதற்கு ஒரு வழி வகை கிடைக்கும்” என்றார் அவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திருநங்கைகளிடம் பொருட்கள் வாங்கி அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட விரும்புபவர்கள் 9791548132 (கஜோல்) என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி