ஹோம் /திருச்சி /

2023 ஜல்லிக்கட்டு.. திருச்சியில் மல்லுக்கட்ட வேற லெவலில் தயாராகும் காளைகள்..!

2023 ஜல்லிக்கட்டு.. திருச்சியில் மல்லுக்கட்ட வேற லெவலில் தயாராகும் காளைகள்..!

X
திருச்சி

திருச்சி ஜல்லிக்கட்டு காளைகள்

Trichy Jallikattu Bulls | திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராமத்தில் வசித்து வரும் பி.ஆர்.எம் செந்தில் மற்றும் எஸ்.என்.எஸ். குரூப்ஸ் இளைஞர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வளர்க்கும் 12 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைத்து இருக்கும் காளைகளானது, ஏர் உழுவதலில் ஆரம்பித்து ஏறு தழுவதல் வரை ஒரு மனிதனின் வாழ்க்கையில், பின்னிப்பிணைந்து ஒரு உறவை ஏற்படுத்தி உள்ளன. ஏறு தழுவுதல் என்பது பலநூற்றாண்டுகளாக தமிழர்களின் தொன்மை குடிகளான ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டு என்று வரலாறு கூறுகிறது.

தென் தமிழக பகுதிகளில் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குபவரை மணமகனாக தேர்வு செய்யம் முறை இருந்தது. அந்த முறை காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டாலும், ஏறு தழுவுதல் இன்று ஜல்லிக்கட்டு என்று உருமாறி தமிழர் வீரத்தின் அடையாளமாக பெயர் பெற்றுள்ளது.

இந்த வீர விளையாட்டை இன்றும் தமிழர்கள் வெகு, விமரிசையாக திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் அன்று,மணமகனை தேர்வு செய்ய விளையாடப்பட்ட நிலை மாறி இன்று வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வெளியே வரும் காளைகளை அடக்குபவர்களுக்கு, பண முடிப்பில் ஆரம்பித்து, கார் வரை பரிசாக வழங்கும் அளவிற்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நவீனமாக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் ஒருமுறை வாடி வாசலுக்குள் தங்களுடைய காளைகளை களம் இறக்குவதற்காகவே, அவற்றை வருடம் முழுவதும் நன்கு பராமரித்து, பயிற்சி, அளித்து வருகின்றனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்வது என்று ஒரு பெரும் கூட்டம் இந்த காளைகளுக்காகவே தங்களுடைய நேரத்தை, செலவிட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பல மாவட்டங்களில் காளைகளை ஆயத்தம் செய்யம் பணி. நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராமத்தில் வசித்து வரும் பி.ஆர்.எம் செந்தில் மற்றும் எஸ்.என்.எஸ். குரூப்ஸ் இளைஞர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வளர்க்கும் 12காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு காளைகள் பெரும்பாலும் ஜெயங்கொண்டம், அலங்காநல்லூர், சூரியூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1 லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

திருச்சி திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவரான செந்தில்குமார் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு குறித்து கூறுகையில், இந்த ஜல்லிக்கட்டு காளைகள் எங்கள் வீட்டு பிள்ளைகள், அது எந்த ரகத்தை சேர்ந்த காளைகளாக இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு காளைக்கும் நாங்கள் செல்லப் பெயர்கள் வைத்துள்ளோம் .அதில் குறிப்பிட்ட சில காளைகள் தொடர்ந்து வெற்றி பெற்று வரக்கூடியவை எனவே அவகைளுக்கு அணுகுண்டு, மெண்டல், சரவெடி, முத்து, கேடி, ராஜன் யூ செவலை, தோஸ்த், ரங்கா, என்று பெயர்கள் வைத்துள்ளோம், அதற்கு அருகில், சென்று இந்த பெயரை கூப்பிட்டால் சிறுகுழந்தைபோல அமைதியாக நின்றுவிடும். வாடி வாசலில் சீறி பாயம் காளைகள் பார்ப்பதற்கு கம்பீரமான

தோற்றம் கொடுத்தாலும், எங்கள் வீட்டு கட்டுத்தரையில் இருக்கும்போது. அதனுடன் எங்கள் வீட்டு குழந்தைகளும் விளையாடும், அதேபோல் இந்த காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்கும் இரண்டு மாதமும் அவைகளுக்கு பருத்திக்கொட்டை கோதுமை தவுடு, பாசிமாவு, கருக்காதவடு. உள்ளிட்டவைகள் வழங்குவோம். குறிப்பாக பேரிச்சம்பழம் அதிகளவில் வழங்குவோம்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே காளைகளை தயார் செய்ய

ஆரம்பித்துவிடுவோம் நாங்கள் 20 இளைஞர்கள், உள்ளோம். அதில் பாதிபேர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து பயிற்சி கொடுப்பார்கள் மற்றவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலைவேளையிலும்,

வாரத்தின் இறுதி நாட்களிலும் பயிற்சி அளிப்போம் அதற்கு நீச்சல் பயிற்சி. மண்,குத்துதல், மரத்திற்கு இடையில் காளைகளை கட்டி அதனை பாய்வதற்கு தயார் செய்தல், நடைபயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறோம்.

இன்னும் ஒருசில உணவுகள் வழங்குவோம் அவை வெளியில், சொல்ல முடியாது. ஜல்லிக்கட்டு இல்லாத மற்ற நாட்களில் இவற்றை பராமரிக்க ஒரு மாட்டிற்கு குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவு ஆகும். கடந்த ஆண்டு போதிய பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியானது. நடைபெற்றது ஆனால் இந்தாண்டு மிக பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிகட்டில் ராஜன், முத்து, கேடி செவலை இந்த நான்கும் பிடிபடாமல் பல பரிசுகளை பெற்று தந்தது.

இந்தாண்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட போட்டிகளில் அணுகுண்டு, சரவெடி, முத்து உள்ளிட்ட காளைகளை பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த முறை கார் பரிசாக பெற்று தரும் என்று. நம்புகிறோம். மற்ற காளைகள், அனைத்தும் திருச்சி மாவட்டத்தில் உள்ள. சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளோம் என்று கூறுகிறார்.

எங்களுடைய ஒரே வேண்டுகோள் இந்தாண்டு எந்தவித தடங்கல்களும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்த

விதிமுறைகளையும் விழாக்குழுவினர்கள். காளையின் உரிமையாளர்கள்அனைவரும் கடைபிடிப்போம். எனவே வருடத்திற்கு ஒருமுறை நாங்கள் கொண்டாடும் மிகப்பெரிய திருவிழா, பண்டிகை இந்த ஜல்லிக்கட்டு போட்டி

மட்டும் தான் என்று தன்னுடைய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

First published:

Tags: Jallikattu, Local News, Pongal 2023, Trichy