முகப்பு /திருச்சி /

திருச்சி இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் மாசி மாத தேரோட்ட விழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருச்சி இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் மாசி மாத தேரோட்ட விழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

X
பூச்சொரிதலுடன்

பூச்சொரிதலுடன் தொடங்கிய தேரோட்ட விழா

Trichy Latest News | திருச்சி இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் முதல் வார பூச்சொரிதல் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பிரசித்தி பெற்ற திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது.

முதல் வார பூச்சொரிதல் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பூ தட்டுக்களை ஏந்தி தேரோடும் வீதி வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர்.

பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று பூக்கள் சாற்றப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உற்சவ அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 28 ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

First published:

Tags: Local News, Trichy