இன்றைய நவநாகரீக உலகில் மனிதனின் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உணவு. நேரம் தவறி உண்பது, ரசாயனப் பொருள்கள் மற்றும் வேதிப் பொருள்களை சுவைக்காக உண்பது, கிடைப்பதையெல்லாம் உண்பது என உடல் பருமன், மாரடைப்பு, ஓவ்வாமை, அலர்ஜி என அனைத்து உடல் உபாதைகளையும் இருகரம் நீட்டி வரவேற்கிறோம் என்பதை மறுப்பாரில்லை.
பல வருடங்களாக இயற்கை உணவகத்தில் அசத்தி வரும் அக்கா கடை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திருச்சி ஆண்டாள் தெரு பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை. கணவனை இழந்த இவர் பல வருடங்களாக இயற்கை உணவகத்தை செய்து வருகிறார். காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இயற்கை சார்ந்த உணவுகளை மக்களுக்கு விருந்தாக அளித்து வருகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அக்கா கடை இருக்கு ஒரு கூட்டமே இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy