ஹோம் /திருச்சி /

திடீர் பள்ளம்.. பூமியில் புதைந்த மினி லாரி.. திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் | நவ. 16

திடீர் பள்ளம்.. பூமியில் புதைந்த மினி லாரி.. திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் | நவ. 16

திருச்சி

திருச்சி

Today Trichy News | திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 16 - புதன்) முக்கியச் செய்திகள் என்னென்ன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 16 - புதன்) முக்கியச் செய்திகள் என்னென்ன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்..

1. திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

2. பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சியில் 18 இடங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தந்த பகுதி மண்டல அமைப்புகளின் சார்பில் அர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆளும் திமுக அரசை கண்டித்தும், விலை உயர்வுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

3. திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 39,680

மேலும் படிக்க : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

4. திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 11 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர வெண்கலச் சிலையின் திரை, காற்றிலும் மழையிலும் சேதமடைந்து முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிலை தற்போது முழுவதுமாக வெளியே தெரிகிறது. 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட இந்தச் சிலை நீதிமன்ற வழக்கு, அரசியல் காரணங்களால் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது

5. திருச்சி அருகே பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட மூவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்

6. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 103.06க்கும், டீசல் ரூ. 94.69க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

7. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்த விழிப்புணர்வு பேரணியை இப்பகுதி 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் தொடக்கிவைக்கயிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அப்பள்ளியின் தலையை ஆசிரியர் நாகராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

8. திருச்சியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்களுக்காக சாலைகளில் பள்ளங்கள் தோட்டப்பட்டு அதனை சீரமைக்காமல் விடுவதால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று திருவானைக்கோவில் பகுதியில் அதிக லோடு ஏற்றிச் சென்ற மினிலாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

9. வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையாக 31.3 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 23.1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

10. சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 925 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவர் ரூ.16.45 லட்சம் மதிப்பில் 308 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், ஸ்கூட் விமானத்தில் திருச்சி வந்த ஒருவரிடம் ரூ. 16.50 லட்சம் மதிப்பிலான 309 கிராம் தங்கத்தையும், மற்றொருவரிடம் இருந்து 309 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்

Published by:Arun
First published:

Tags: Headlines, Local News, Trichy