Home /trichy /

சென்னைக்கு மெரினா, திருச்சிக்கு காவிரி பாலம்...!!

சென்னைக்கு மெரினா, திருச்சிக்கு காவிரி பாலம்...!!

திருச்சி

திருச்சி காவிரி பாலம்

Trichy Cauvery Bridge : சென்னை போன்ற கடற்கரையோர மாவட்டத்து மக்கள், லீவு நாள்களில் பொழுதைப் போக்க பீச், பார்க் என  போவார்கள். ஆனால், எங்களின் பொழுதைப் போக்கக் காவிரிப் பாலத்துக்குத்தான் போகிறோம் என்கிறார்கள் திருச்சிவாசிகள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
வரலாற்றின் மாநகரமாம்  திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம்.  மாலை நேரத்துல காவிரி பாலத்துக்கு அடியில், ஆத்து தண்ணிக்கு மேல சூரியன் மறையிற காட்சிலாம் அப்படி ஒரு அழகுங்க.. அப்படியே ஆரஞ்சும், ஊதாவும் வானமும், சூரியனும், தண்ணியும் ஒண்ணா இருக்குற அழகை காண இரு கண்கள்.போதாது என்கிறார்கள் திருச்சி வாசிகள்.

சென்னை போன்ற கடற்கரையோர மாவட்டத்து மக்கள், லீவு நாள்களில் பொழுதைப் போக்க பீச், பார்க் என  போவார்கள். ஆனால், எங்களின் பொழுதைப் போக்கக் காவிரிப் பாலத்துக்குத்தான் போகிறோம் என்கிறார்கள் திருச்சிவாசிகள்.

தினமும் ஜில்லென்ற காற்று, தண்ணீர் பாய்ந்தோடும் சத்தம் ஆகியவை நம் மனதை இதமாக்கி விடுகிறது.
திருச்சியில் உள்ள பாலங்களில் மிகப் பழைமையான பாலத்தில் ஒன்றாக இருப்பது இந்த காவிரிப் பாலம். ஆற்றங்கரையில் உள்ள ஊரான ஸ்ரீரங்கத்தையும், திருச்சியின் மாநகரப் பகுதியையும் இணைக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டிலிருந்து இளம் வயதினர் முதல் வயதானவர் வரை எல்லாருக்குமான மீட்டிங் ஸ்பாட் இந்த காவிரி பாலம் தான். மழலைகளும், சிறுவர்களுமாக குழுமியிருந்த குடும்பத்திடம் பேசினோம்..

திருச்சி காவிரி பாலம்


“நான் திருச்சி தில்லை நகரில் வசிச்சுட்டு வர்றேன். திருச்சி சிட்டிக்குள்ள பூங்காவை தவிர பெரிசா எந்த மீட்டிங் ஸ்பாட்டும் இல்லாததால், ஒட்டுமொத்த திருச்சி மக்களுக்கும் வரப்பிரசாதமா இந்தப் பாலம் இருக்குனு சொல்லலாம். என் பிள்ளைகளுக்கும் இங்க வர்றதுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஒவ்வொரு வாரமும் குடும்பத்தோட இங்க வந்துருவோம்.

நாங்கள் தினந்தோறும் வேலை என்று வெளியே சென்று விட்டு வருகிறோம் ஆனால் எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் எங்கேயாவது சொல்ல வேண்டும் என்றால் கூட அதற்கான சரியான நேரம் கிடைப்பதில்லை இருந்தாலும் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தது போல் இருக்கும் சூழ்நிலை மனதை ஒரு விதமான அழுத்தத்திற்கு கொண்டு சென்று விடும்.

காவிரி ஆறு


ஆகையால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது மாலை நேரங்களில் எங்கள் குடும்பத்துடன் இந்த காவிரி பாலத்தை வந்து பார்த்து ரசித்து விட்டு இங்கு அருகில் இருக்கும் தின்பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து சிறிது நேரம் குளுமையான காற்றையும் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி ஆற்றின் தண்ணீரையும் பார்த்து ரசித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வோம் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காவிரி பாலத்திற்கு வந்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது மனதுக்கு ஒரு விதமான புரியாத மகிழ்ச்சியாக இருக்கும்.

திருச்சியை பொருத்தவரை சுற்றிப் பார்ப்பதற்கும் குழந்தைகளை அழைத்து சென்று விளையாட்டு காண்பிப்பதற்கும் சரியான இடம் காவிரி பாலத்தை தவிர வேறெதுவும் இல்லை.   சென்னைக்கு எப்படி மெரினா கடற்கரையோ அது போன்று திருச்சியில் வசிக்கும் மக்களுக்கு  காவிரி பாலம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

 
Published by:Arun
First published:

Tags: Cauvery River, Local News, Trichy

அடுத்த செய்தி