பல்வேறு சிறப்புகள் உடைய திருச்சியின் வரலாற்றுச் சுவடுகள் ஒவ்வொன்றும் இன்றளவும் பேணிக்காத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் திருச்சியின் ஆன்மீக அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 1,120 வருடங்களுக்கு பழமையான தர்காவான இங்கு இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
சுமார் 1,120 வருடங்களுக்கு முன்பு நத்தர்ஷா வலி எனும் இசுலாமிய சூபி மகான் தனது சுல்தான் பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்து மக்களுக்கு பல சேவைகள் செய்தார்.
அவர் இறந்த பின் அவரை திருச்சியிலேயே அடக்கம் செய்தனர். அவரை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்பள்ளிவாசல் தான் நத்தர்ஷா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா அன்று அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம், இரவு காந்தி மார்க்கெட் ஆர்ச்சில் இருந்து தொடங்கி பெரியகடைவீதி, சிங்காரதோப்பு வழியாக வலம் வந்து அதிகாலை பள்ளிவாசலை அடையும். சந்தனக்கூடு விழாவானது இப்பகுதியில் கோலாகலமாக நடைபெறும்.
1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். இப்பள்ளிவாசலில் பணிபுரிவோர் தங்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்று தங்கள் மனக்குமுறலை நம்மிடையே வெளிப்படுத்தினர். இதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mosque, Trichy