முகப்பு /செய்தி /திருச்சி / நெருங்கும் சதயவிழா.. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம்..

நெருங்கும் சதயவிழா.. திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம்..

முத்தரையர் மணிமண்டபம்

முத்தரையர் மணிமண்டபம்

Perumbidugu Mutharaiyar Memorial at Trichy : பேரரசர் பெடும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளான சதயவிழா, ஆண்டுதோறும் மே 23ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழக நிலப்பரப்பை கி.பி. 705 முதல், கி.பி. 745 வரை, ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.

தனது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார்.

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச் செய்தவர்.

இத்தகைய சிறப்புமிக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளான சதயவிழா, ஆண்டுதோறும் மே 23ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம், திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு, அரசுத் தரப்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

மேலும் படிக்க : ஊட்டி காட்டேஜ்களில் எகிறிய வாடகை.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..

பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம்

இதற்கிடையே, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் வ.உ.சி., சாலையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் நூலகத்துடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌.  மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம்

இதைத்தவிர்த்து, நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய  சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், ரூ.42 லட்சம் செலவில், 1,722 சதுர அடி பரப்பளவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அச்சுறுத்தும் அரிசி கொம்பன்..! மேகமலைக்கு செல்ல தொடரும் தடை..!

இந்த, 3 மணி மண்டபங்களின் பணிகள் நிறைவுற்று ஓராண்டுகளுக்கு மேலாகியும், தற்போது வரை திறப்பு விழா காணாதது பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

நெருங்கும் சதயவிழா 

இந்நிலையில் வரும், 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

இதுகுறித்து வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கே.கே. செல்வக்குமார் கூறியபோது, "பேரரசர் பெடும்பிடுகு முத்தரையர் சதயவிழாவன்று, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, தற்போது அளுந்தூர் என்று அழைக்கப்படும் அழுந்தியூர் என்ற ஊரில் பேரரசர் பெடும்பிடுகு முத்தரையர் பெற்ற போர் வெற்றியை நினைவுகூறும் வகையில், 1,000 வாகனங்களில் அங்கிருந்து பேரணியாக கிளம்புகிறோம்.

இந்த பேரணிக்கு 'தமிழர் ஒற்றுமைப் பேரணி' என்று பெயரிட்டுள்ளோம். திருச்சி ஒத்தக்கடை முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம். இந்நிகழ்வுகள் அனைத்திலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார். எங்களது பிரதான கோரிக்கை திருச்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள முத்தரையர் மணி மண்டபத்தை வரும் சதய விழாவிற்குள் திறக்க வேண்டும்.

top videos

    இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள முத்தரையர் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

    First published:

    Tags: Local News, Trichy