Home /trichy /

அடேங்கப்பா.. மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.. சாபவிமோசனம் தரும் ஆலயம் இது..

அடேங்கப்பா.. மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.. சாபவிமோசனம் தரும் ஆலயம் இது..

மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்..

மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்..

Trichy Maanturai Amravaneswarar Temple | திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள ஆம்ரவனேஸ்வரர் கோவிலில் வழிபட்டால் தோஷங்கள், பாவங்கள் மற்றும் சாபங்கள் நீங்கி நிம்மதி பெறலாம் என்ற ஆழமான நம்பிக்கை நிலவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சியில் மாமரத்தின் பெயரைக் கொண்டு விளங்கி வருகிறது மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயம். இந்த  கோவிலானது திருச்சி - லால்குடி சலையில் அமைந்துள்ளது. ஆம்ரம் என்றால் மாமரம் என்று பொருள். இந்த தலம் வடகரை மாந்துறை என்று அழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வழிபட்ட தேவாரத் திருத்தலம் இந்த வடகரை மாந்துறை. காவிரி வடகரைத் தலங்களில் இது 58ஆவது திருத்தலமாக விளங்குகிறது.

திருச்சியில் இருக்கும் பஞ்ச சிவாலயங்களில் இதுவும் ஒன்று. சேக்கிழார், சேரமான் பெருமாள் நாயனார், அர்ஜுனன், சூரியன், சந்திரன் மற்றும் இந்திரன் போன்றோர் இந்த வழிபட்ட தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சிவபெருமானின் அடி முடி தேடியபோது, திருவண்ணாமலையில் சிவனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறிய நான்முகனான பிரம்மாவின் இந்த தலத்தில் தவமிருந்து தனது சாபத்தை நீக்கிய தலமாக போற்றப்படுகிறது. மார்க்கண்டேயன் மரண பயத்தை நீக்கிக்கொள்ள தவம் இருந்த தலமும் இதுதான் என்கின்றனர். பரிகாரத் தலங்களில் இது மூல நட்சரத்திற்கு உரிய ஆலயமாக திகழ்கிறது.

சூரியனின் மனைவி சமுக்யாதேவி, தன் கணவனின் உக்கிரமான உஷ்ணத்தைப் பெறுத்துக் கொள்ள தவம் இருந்து சக்தியைப் பெற்ற தலம் என்றும் போற்றப்படுகிறது. கெளதம ரிஷியின் மனைவி அகலிகையைத் தீண்டிய இந்திரன், தன்னுடைய சாபத்தைத் தீர்த்துக்கொண்ட கோவிலும் இதுதான்.

ஈசனை ஒதுக்கி தட்சன் செய்த யாகத்தில் கலந்துகொண்ட சூரியன், சாபவிமோசனம் பெற வழிபட்டு அதற்கான பலனைப் பெற்ற தலமும் இதுதான் என்கின்றனர். தாய், தந்தையை இழந்த மானுக்கு சிவனும் சக்தியும் மான் வடிவில் தோன்றி பசி தீர்த்த தலமும் இதுவே. மானுக்கு அருள்புரிந்த தலம் என்பதால் இது மான் துறை என்றாகி, மாந்துறை என்றானதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல, ஆதிசங்கரர் வழிபட்டு ஈசனிடம் உபதேசம் பெற்ற தலம் என்ற சிறப்பையும் பெற்று விளங்குகிறது.

இந்த ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில் சிவனை மிருகண்டு ரிஷி வழிடும் சித்திரங்கள், விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரம், பைரவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சாந்த துர்க்கை சிலைகள் அமைந்துள்ளன. சுந்தரர் சிலை கண்ணிழந்த நிலையில் இங்கே காட்சிதருகிறது. சூரியனம் அவன் மனைவியும் அருள்பெற்ற தலம் என்பதால், இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தனது மனைவிகளுடன் காட்சி தருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுயம்பு மூர்த்தியாக மிருகண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். தோஷங்கள், பாவங்கள் மற்றும் சாபங்கள் உள்ளவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் அவை தீரும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த கோவிலில், அன்னை சக்தி அழகம்மை எனும் பாலாம்பிகையாக விளங்ககிறாள். மங்கல வாழ்வு தரும் மந்திர நாயகி என்று இவளை போற்றுகின்றனர். இவளை வணங்க திருமணம் கைகூடும், மாங்கல்ய பலமும் கிட்டும் என்கின்றனர். இந்த பாலாம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

பிரதோஷ நாட்கள், ஆடிவெள்ளி, நவராத்திரி, திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாள்களில் இங்கு விசேஷமாக ஆராதனை செய்யப்படுகிறது. இந்த திருத்தலத்திற்கு திருச்சி மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு, வேண்டிச் செல்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Hindu Temple, Local News, Trichy

அடுத்த செய்தி