Home /trichy /

திருச்சி காவிரி பாலம் இன்று நள்ளிரவு முதல் மூடல் - இனி 3 மாதத்துக்கு மாற்றுப்பாதை இது தான்..

திருச்சி காவிரி பாலம் இன்று நள்ளிரவு முதல் மூடல் - இனி 3 மாதத்துக்கு மாற்றுப்பாதை இது தான்..

நள்ளிரவு

நள்ளிரவு முதல் 3 மாதத்துக்கு காவிரி பாலம் மூடல்..

Trichy Cauvery Bridge | காவிரி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று நள்ளிரவு மூடல் - மாற்று பாதையில் செல்ல திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்க உள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள சராசரியாக 5 மாத காலம் ஆகும்.

எனவே காவிரிப் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை இன்று இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி, ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி, கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி, ஓயாமரி வழியாக அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அதேபோல சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி