ஹோம் /திருச்சி /

தாயுமானவர் சுவாமி கோவில் யானையின் பர்த்டே கொண்டாட்டம்.. திருச்சி மாவட்ட இன்றைய (நவ. 17( முக்கிய நிகழ்வுகள்

தாயுமானவர் சுவாமி கோவில் யானையின் பர்த்டே கொண்டாட்டம்.. திருச்சி மாவட்ட இன்றைய (நவ. 17( முக்கிய நிகழ்வுகள்

திருச்சி

திருச்சி

Today Trichy News | திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 17 - வியாழன்) முக்கியச் செய்திகள் என்னென்ன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டத்தின் இன்றைய (நவம்பர் 17)முக்கியச் செய்திகள் என்னென்ன என்பதை தற்போது காணலாம்..

1. திருச்சி ஜங்சனில் இருந்து பழுதடைந்த பயணிகள் ரயில் பெட்டிகளை பராமரிப்பு பணிக்காக பொன்மலை பணிமனைக்கு இன்ஜினை வைத்து இழுக்கும்போது இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. அதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளப்பாதைக்கு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் ஏற்றினார்கள். இதனால் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கு வந்து சேர்ந்தது

2. திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். கடந்த திங்கட்கிழமை அரியமங்கலம் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் இன்று மற்றொரு கார் தீப்பிடித்து எரிந்தது கார் ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

3. திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மலேசியாவிற்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தின் முன் பகுதியில் உள்ள எந்திர இறக்கையில் பறவை மோதியதால் பழுது ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் விமானத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாததால் பயணிகள் மாற்று விமானத்தில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

4. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கத்தம்பூரில் கழிவுநீர் செல்லும் வழி குறித்து இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து .கொண்டார். இச்சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

5. திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 39,520

மேலும் படிக்க : உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

6. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் சுவாமி திருக்கோவிலின் யானை லட்சுமிக்கு கோவில் வளாகத்தில் கடந்த 15ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இனிப்பு மற்றும் பழங்களை சுவைத்தபடி மகிழ்ச்சியில் தலையை ஆட்டிய லட்சுமியை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்

7. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 103.06க்கும், டீசல் ரூ. 94.69க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

8. திருச்சி - இலங்கை இடையே வரும் டிசம்பர் 8 முதல் புதிய விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குச் சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி இயக்கப்படும் இரு விமானங்கள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் புதிதாக இயக்கப்படும் விமானங்கள் மூலம் பயணிகள் இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம் துபாய் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது

9. அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி திருச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

10. வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையாக 31.3 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 23.1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக உள்ளது

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy