ஹோம் /திருச்சி /

‘அந்த மனசு தான் சார் கடவுள்’.. 100 முதியோருக்கு தினமும் சொந்த செலவில் விருந்து.. ஆச்சரியப்படுத்தும் திருச்சி பாரதி..!

‘அந்த மனசு தான் சார் கடவுள்’.. 100 முதியோருக்கு தினமும் சொந்த செலவில் விருந்து.. ஆச்சரியப்படுத்தும் திருச்சி பாரதி..!

X
திருச்சி

திருச்சி

Trichy - Social Activist | திருச்சி பீமநகரை சேர்ந்த பாரதி தினமும் ஆதரவற்ற 100 முதியோருக்கு இலவசமாக சாப்பாடு போடுகிறார்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று சொன்ன மகாகவி பாரதியின் சொல்லைத் தவறாமல் பின்பற்றி வருகிறார் திருச்சியை சேர்ந்த பாரதி என்ற இளைஞர்.

திருச்சி பீமநகரை சேர்ந்த பாரதி தினமும் ஆதரவற்ற 100 முதியோருக்கு இலவசமாக சாப்பாடு போடுகிறார் என்று நமக்கு தகவல் கிடைத்ததும் அவரைக் சந்திக்க பீமநகர் பகுதிக்கு சென்றோம். அங்கு போனதும் அவரைப்பற்றிக் கூறி அவருடைய வீட்டுக்கான வழியைக் கேட்ட போது, ஒரு மூதாட்டி நான் அங்க தான் போறேன் வாங்க போலாம்னு சொன்னாங்க.

மூதாட்டியை பின் தொடர்ந்தோம் அங்க போய் பார்த்தா ஏராளமான ஆதரவற்றோர்கள் கண் பார்வையற்றவர்கள் கூட்டம் கூட்டமாக இருந்தார்கள்.

பாரதியின் வீட்டு அருகே காத்திருக்கும் முதியோர்

அந்த வீட்டிற்கு நாம் சரியாக மதியம் ஒரு மணிக்கு சென்றோம். வெளியே கும்பல் கும்பலாக முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் என பல மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர். பேச்சுலர் ஆன பாரதி அங்கு காத்திருந்தவர்களை அழைக்க, உடனே அந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஒரு அறைக்குள் சென்று அமர்கின்றனர்.

முதியோருக்கு தினமும் சொந்த செலவில் விருந்து

கண் தெரியாத முதியோரை அவரே அழைத்துச் சென்று உட்கார வைக்கிறார். அங்கே அவர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. வாழை இலை போட்டு உயர் ரக அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை என தினமும் விருந்து போல சாப்பாடு தருகிறார். இது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின்போது சாப்பிட வரும் முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புடன் உணவு வழங்குகிறார்.

முதியோருக்கு தினமும் சொந்த செலவில் விருந்து

அன்றாட வேலைகளுக்கு இடையே பாரதியிடம் பேச நமக்கு நேரம் கிட்டியது. இதுகுறித்து பாரதி கூறும் போது “ நான் பிறந்தது   திருச்சி  மலைக்கோட்டை பகுதியில் தான். தற்போது பல ஆண்டுகளாக பீமநகர் பகுதியில் வசித்து வருகிறேன். சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்தவுடன் வீடு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்தேன். அந்த சமயத்தில் என் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டனர். எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் திருமணம் முடிந்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.

திருச்சி பாரதி

எனக்கு சிறுவயதிலிருந்தே சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்தது. முதலில் ரோட்டரி கிளப் உறுப்பினராக சேர்ந்து பல சேவைகளை செய்தேன். பிறகு நான் சந்திக்கும் சில மனிதர்களுக்கு உணவு வாங்கித் தந்தேன்.  எனினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே 2004 ஆம் ஆண்டில் இருந்து முழுநேரமும் ஆதரவற்ற முதியோருக்கு உணவு சமைத்து வழங்க ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க:  பித்ரு தோஷம் நீங்க தஞ்சாவூரில் வழிபட வேண்டிய கோவில்

எனக்கு இந்த வேலை தான் மனநிறைவை தருகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், எனக்கு மனைவி, குழந்தைகள் என இருந்தால் ஆதரவற்றோரை கவனிப்பது கஷ்டமாகிவிடும். எனவே, அதை நான் தவிர்த்து விட்டேன். என் வீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் 2 அறைகளை உணவு கொடுப்பதற்காகவே ஒதுக்கி விட்டேன். தற்போது, ஒரு அறையில் சமையல். தினமும் 100 பேருக்கு மேல் சாப்பிடுகின்றனர். மதியம் 3 மணிக்கு உணவு தீர்ந்துவிடும்.

அதன் பிறகு யாராவது வந்தால் கூட உடனே அடுப்பை பற்ற வைத்து விட சொல்லி விடுவேன்ன். இங்கே வரும் அனைவரையும் என் பெற்றோர்களாகவே கருதுகிறேன். 18 வருடங்களாக தொடர்ந்து அவர்களுக்கு என்னால் முடிந்த கடமையைச் செய்து வருகிறேன். இனியும் செய்வேன்  " என்றார் மீண்டும் தன் வேலைகளை தொடங்கினார்.

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

மதியம் 12 மணி முதல் பாரதியின் வீட்டுத் திண்ணையில் முதியவர்கள் வந்து அமர தொடங்குகின்றனர். சமையல் பணி முடிந்தவுடன் சரியாக மதியம் ஒரு மணிக்கு சாப்பிட அழைக்கிறார் பாரதி. 15 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய சிறிய அறை என்பதால், மற்றவர்கள் காத்திருக்கின்றனர்.

இவரது சேவையை பார்த்து பாராட்டுவதோடு, பலரும் உதவி செய்கின்றனர். சில மனிதர்கள் தங்களது பிறந்தநாள் அன்று இங்கு வந்து ஆதரவற்றோருடன் தங்கள் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பாரதியின் சமூக சேவை குறித்து மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள்  83442 55889 என்ற மொபைல் எண்ணில் அவரை அழைக்கலாம்..

First published:

Tags: Local News, Trichy