Home /trichy /

துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. நர்சிங் மாணவி மரணம்.. திருச்சி மாவட்ட செய்திகள் (மே 19)

துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. நர்சிங் மாணவி மரணம்.. திருச்சி மாவட்ட செய்திகள் (மே 19)

திருச்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.

திருச்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.

Trichy District: திருச்சியில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

  திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.

  1.  மற்ற 6 பேரை விடுவித்தால் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் - எம்.பி.திருநாவுகரசு பேட்டி.


  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 வருடமாக சிறையிலிருந்த பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மேலும் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சி வரவேற்றாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்திருந்தது. தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிப்பின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு அறம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது.

  இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர்,
  பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அவர் குற்றமற்றவர் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிரபராதி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை.

  உச்ச நீதிமன்ற வரம்பிற்கு இந்த விடுதலை உட்பட்டதா இருக்கலாம். தர்மத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை உண்டாகும். மற்ற 6-பேரை விடுதலை செய்தால் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.பல்வேறு வழக்குகளில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிறையில் உள்ளனர்.கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால் எல்லா செயல்களையும் திறந்து விட வேண்டியது தவிர வேறு வழிஇருக்காது. விடுதலையாகி வெளியே வந்த பிறகுவிடுதலை வரவேற்றாலும் அவர் விடுதலையானதை கொண்டாடுவது, திருவிழாவைப் போல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது இது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

  திருச்சி சாரநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்..

  திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு முதலுதவி முறைகள் குறித்த பயிற்சி முகாமானது 15.05.2022 அன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

  இந்நிகழ்ச்சியில் R.நாராயணசாமி பேசுகையில் சாலையில் ஏற்படும் பல விபத்துகளுக்கான முதன்மைக் காரணம் கவனக்குறைவு என்பதனையும், தலைக்கவசத்தின் இன்றியமையாமையை பற்றியும் விளக்கினார். எந்த நிலையில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதனையும் பல வகையான காயங்கள் குறித்தும் சிறிய மற்றும் பெரிய காயங்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகளைப் பற்றியும் கூறினார்.

  மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம்.


  திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே வருவாய் துறையினருக்கு சொந்தமான அரசு நிலத்தை 1938ஆம் ஆண்டு ஆபீஸர் ரெக்ரியேசன் என்ற பெயரில் கிளப் ஒன்று தொடங்கப்பட்டு 1975 ம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ளனர்.
  அரசுக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை உடனடியாக காலி செய்வது தருமாறு கிளப் செயலாளரிடம் அரசு கூறி உள்ளது. கிளப் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் காலி செய்ய மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிளப் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் கிளப் உறுபினர்கள் தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து அரசு பக்கம் சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிபில் கட்டபட்ட
  5 சென்ட் கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் கொண்டு இன்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். இச்சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  காந்தி மார்க்கெட்டில் நீர் மோர் பந்தல் - மேயர், எம்எல்ஏ பங்கேற்பு.

  இந்திய நாடார் பேரவை சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை சப் ஜெயில் ரோடு பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் விழா நடைபெற்றது. விழாவுக்கு இந்திய நாடார் பேரவை தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் அன்பழகன் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

  மூதாட்டி மரணம்:

  திருச்சி சின்ன கடை வீதி கோவிந்தன் பிள்ளை ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி நவநீதம்.இவர் சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக படுக்கை அறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி மரணம்:

  திருச்சி வடக்கு தரணல்லூர் கோனார் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகள் தீபிகா இவர் தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

  இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் விரக்தி அடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டார்.உடனே திமுகவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  இருசக்கர வாகன திருட்டு - கைது.

  திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயுள்ளது. இதன்பேரில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிரமாக ரோந்து சென்ற போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர் இந்நிலையில் திருச்சி புறநகர் பகுதியில் ஜாஸ்மின் சுல்தான் என்பவரின் வாகனம் திருடியதாக நவலூர் குட்டப்பட்டு வைச் சேர்ந்த முருகவாணன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தது.

  திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத முதியவர்  சடலம்.

  திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதனடிப்படையில் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர் - என்.மணிகண்டன்.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி