ஹோம் /திருச்சி /

நிரம்பி வழியும் துறையூர் பெரிய ஏரி...! விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி...!

நிரம்பி வழியும் துறையூர் பெரிய ஏரி...! விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி...!

துறையூர் பெரிய ஏரி

துறையூர் பெரிய ஏரி

Trichy | திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரி கனமழையால் மீண்டும் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பச்சைமலை, வைரிசெட்டிபாளையம், ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், செங்காட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், துறையூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடைக்கால் வழியாக நீர்யேறி வருகிறது. இதற்கிடையில், மழை தொடர்ந்து பெய்ததால் ஏரியில் இருந்து மீண்டும் அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது.

இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்த பெரிய ஏரியானது, நடப்பு ஆண்டில் மட்டும் 5வது முறையாக நிரம்பி வழிகிறது.

இதையும் படிங்க : சிவனை வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் வழிபடும் தலம் - திருச்சியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோவிலா? 

இந்த பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாலக்கரை சின்ன பாலம் வழியாக சின்ன ஏரியை சென்றடைகிறது. இதனால் துறையூர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், பொதுமக்களுக்கு ஓராண்டு காலத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். இதற்கிடையில், துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம விவசாயிகள், விவசாய சாகுபடி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Trichy