Home /trichy /

லஞ்சம் வாங்கி சிக்கிய BDO.. நீருக்குள் மூச்சு அடக்கி விளையாடியவருக்கு நேர்ந்த துயரம் - சுடச்சுட திருச்சி செய்திகள்

லஞ்சம் வாங்கி சிக்கிய BDO.. நீருக்குள் மூச்சு அடக்கி விளையாடியவருக்கு நேர்ந்த துயரம் - சுடச்சுட திருச்சி செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.

Trichy District: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை சுருக்கமாக காணலாம்..

  திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை சுருக்கமாக காணலாம்..

  வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

  திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் .இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட தேர்வான பயனாளிகளிடம்ரூ. 3000 வீதம் ஐந்து பயனாளிகளிடம் ரூ.15000ம் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பயனாளியிடம் நான் இடத்தை பார்வையிட வரும்பொழுது மீதி பணத்தை தர வேண்டும் என்று கறாராக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மது பாட்டில்கள் கடத்தல்.

  திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து எடமலைப்பட்டிப்புதூர் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 2 வாலிபர்கள் 54 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை கடத்தி வந்தவர்கள் கிராப்பட்டி மிஷன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 36), கிராப்பட்டி விறகுப்ேபட்டை பகுதியை சேர்ந்த மணி (29) என தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு.

  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்கடந்த13-ந்தேதிநடைபெற்றது. தேர் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இத்துடன்தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

  மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..

  தொட்டியம் அருகே உள்ள அலகரைஊராட்சிக்குட்பட்ட கோடியாம்பாளையம் கருப்பண்ணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது46). இவர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்குகள் மற்றும் தனியார் வீடுகளுக்குதினக்கூலி அடிப்படையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலை பார்த்துவந்தார்.இந்நிலையில்நேற்றுகோடியாம்பாளையம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின்வாரியஅதிகாரிகள் அனுமதி இல்லாமல் ஏறி பழுது பார்த்தபோது வீரப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொட்டியம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் சோமசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்.

  திருச்சி பாலக்கரை பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் கூனிபஜார் கோரிமேடு பகுதியை சோ்ந்த 17 வயதுசிறுவனை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை திருச்சி கீழபுலிவார்டு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர், குழந்தைகள் நல அதிகாரி உத்தரவின் பேரில், கடந்த மாதம் 25-ந்தேதி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள சொந்தம் சிறார் வரவேற்பு மையத்தில் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து, அந்த மையத்தின் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகர் கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகிறார்கள்.

  துறையூர் அருகே கிணற்றில் மூழ்கி விற்பனை பிரதிநிதி பலியானார்.

  விற்பனை பிரதிநிதிதுறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர் அருகே வயலில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார்.இந்தநிலையில் அவர் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கி மூச்சை அடக்கி விளையாடியதாக தெரிகிறது. அப்போது, ஆழமான பகுதிக்கு சென்று மூச்சை அடக்கியபோது, மூச்சு திணறி இறந்தார். இதைக்கண்ட கரையில் இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி மனோகரனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றில் மூழ்கி இறந்த மனோகரனுக்கு சரண்யா என்ற மனைவியும், சுதீன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி