ஹோம் /திருச்சி /

சரவெடியை கையில் பிடித்து சுழற்றி திருச்சியில் அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி..

சரவெடியை கையில் பிடித்து சுழற்றி திருச்சியில் அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி..

X
திருச்சியில்

திருச்சியில் துணிவு கொண்டாட்டம்

Trichy Thunivu Release : திருச்சி எல்ஏ சினிமாவில் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள எல்.ஏ திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டத்தில் பல திரையரங்குகளில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்ட நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருச்சி தெப்பக்குளம் அருகே LA cinemas திரையரங்கு முன்பு கூடினர்.

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ரசிகர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்தனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த காரின் மீது ஏறி ஆட்டம் போட்டனர்.   வெடிக்கும் பட்டாசுகளை தலை மேல் வைத்து வெடித்தும், சரவெடியை கையில் பிடித்து வெடித்தனர்.

First published:

Tags: Ajith, Local News, Tamil News, Thunivu, Trichy, Varisu