ஹோம் /திருச்சி /

வாடகை வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில்... திருச்சியில் புரோக்கர் கைது..

வாடகை வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில்... திருச்சியில் புரோக்கர் கைது..

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்

Trichy District News : வாடகை வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ககள வைத்து பாலியல் தொழில் செய்யதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து ரஷ்ராஜா (எ) கார்த்திக் ராஜாவை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.

மேலும் விசாரணையில் கார்த்திக் ராஜா மீது கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்ற 5 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் பூட்டிய வீட்டில் திடியதாக 5 வழக்குகளும், கொலை முயற்சி மற்றும் அடிதடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக 2 வழக்குகள் உட்பட மொத்தம் 19 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : திருச்சியில் திருடன் என நினைத்து இளைஞரை வடமாநில தொழிலாளர்கள் அடித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்

மேலும் கார்த்திக் ராஜா தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு விபச்சார தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அவனைகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Trichy