ஹோம் /திருச்சி /

தீபாவளி பண்டிகைக்காக திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு - முழு விவரம்

தீபாவளி பண்டிகைக்காக திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு - முழு விவரம்

திருச்சியில்

திருச்சியில் 3 பேருந்து நிலையங்கள்

Trichy Latest News | திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலத்தின் மூலம் பொதுமக்கள் எளிதாக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் நேற்று தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது.

இதற்காக திருச்சியில் தற்காலிகமாக 3 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துநிலையங்கள் இன்று முதல் செயல்பட உள்ளது. இதில் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துக்கள் சோனா, மீனா தியேட்டர் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துக்கள் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும் இருந்து புறப்படும்.

இங்கு இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துக்கள் இயங்கும். திருச்சி மண்டல இயக்கப் பகுதிகளான லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

இன்று முதல் வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துக்கள் தினசரி இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும், தஞ்சைக்கு 50 பேருந்துகளும், மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகளும் , கோவைக்கு 20 பேருந்துகளும், திருப்பூருக்கு 20 பேருந்துகளும், திண்டுக்கல் மற்றும் பழனிக்கு 25 சிறப்பு பேருந்துகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பேருந்துகளும், இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கு 50 சிறப்பு பேருந்துகளும், பெரம்பலூருக்கு 25 சிறப்பு பேருந்துகளும், துறையூருக்கு 25 பேருந்துகளும் என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Trichy