முகப்பு /திருச்சி /

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம்.. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு..

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம்.. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு..

X
திருச்சியில்

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம்

Employment Camp | திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, தங்களுடைய நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைத்திருந்தனர். முகாமில் ஆயிரக்கணக்கான வேலை தேடும் இளைஞர்கள் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பலரும் வேலை வாய்ப்பினையும் பெற்றுள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு மட்டுமின்றி பல்வேறு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Trichy