Home /trichy /

திருவானைக்கோவிலில் இருக்கும் வினோத கட்டிடம்.. பதுங்கு குழியா?

திருவானைக்கோவிலில் இருக்கும் வினோத கட்டிடம்.. பதுங்கு குழியா?

திருச்சி

திருச்சி - பதுங்கு குழி

Trichy District News : திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் அமைந்துள்ள வினோத கட்டிடத்தை அப்பகுதி மக்கள் ‘பதுங்கு குழி’ என அடித்து சொல்கிறார்கள்.. அதன் பின்னணி என்ன?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருச்சி திருவானைக்கோவிலில் இருக்கும் அமானுஷ்ய கட்டிடம், ஒரு வேளை பதுங்கு குழியாக இருக்கலாம் என பொதுமக்கள் கருத்து.

போர்க்காலத்தில் பொதுமக்கள் மறைவாகவும், பாதுகாப்பாகவும் தங்குவதற்கு பயன்படுத்துவது பதுங்கு குழி என்னும் பங்கர் ஆகும்.  பதுங்கு குழி என்பது வெடிகுண்டுகள், பீரங்கி அல்லது பிற தாக்குதல்களில் இருந்து மக்களையும் மதிப்புமிக்க பொருட்களையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தற்காப்பு  ராணுவ கோட்டையாகும்.

திருச்சியில் ஒரு பதுங்கு குழி?


பதுங்கு குழிகள் எப்போதும் நிலத்தடியில் இருக்கும், இது பெரும்பாலும் தரைக்கு மேல் இருக்காது. அவை முதலாம் உலகப் போர் , இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போர் ஆகிய காலங்களில் ஆயுத வசதிகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சேமிப்பக வசதிகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பதுங்கு குழிகளை சூறாவளிகளில் இருந்து மக்களை பாதுகாப்க்கவும் பயன்படுத்தியிருக்கலாம் என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

திருச்சியில் ஒரு பதுங்கு குழி?


பதுங்கு குழி வடிவமைப்பில் திருச்சியில் ஒரு வினோத கட்டிடம் உள்ளது அதைப் பற்றிய சமூக ஆர்வலர்களின் கருத்து..

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் செல்லும் வழியில் தெப்பக்குளம் அருகே ஒரு பதுங்கு குழி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கட்டமைப்பை பார்க்கும் போது ஒரு செங்கல் சூளை போன்ற தோற்றத்தை தருகிறது.

திருச்சியில் ஒரு பதுங்கு குழி?


பதுங்கு குழி என்பது அக்காலத்தில் போர்கள் நடக்கும்போது வீரர்கள் பதுங்கி கொள்வதற்கும், ஆயுதங்கள், தானியங்கள், வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொள்வதற்கும் குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து போர் தொடுக்கும்போது அந்த நேரத்தில் சென்று தங்களை தற்காத்துக் கொள்வதற்குமாக அக்காலத்தில் பயன்பட்டு வந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால் திருச்சியில் இருக்கக்கூடிய குழி பதுங்கு குழியா என்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது . ஆனால் அப்பகுதி மக்கள் இது நிச்சயமாக அக்காலத்தில் இருந்த பதுங்கு குழிதான் என கூறி வருகிறார்கள். ஆனால் எங்களை பொருத்தவரை இது பதுங்கு குழியாக இருந்தால் ஒரு பெரிய பிரம்மாண்டமாக தடுப்புச் சுவரும் அதை பார்த்தாலே போர்க்காலங்களில் மற்றவர்களை அரவணைக்கும் இடமாகவும் திகழும் ஆனால் இது பதுங்கு குழியா இல்லை போர் வீரர்கள் போர்க்களங்களில் பயன்படுத்திய இடமாய் என்று தெரியவில்லை.

Thiruvanaikovil
திருவானைக்கோவில்


ஆனால் இப்பகுதி மக்கள் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பதுங்கு குழி தான் கூறி வருகிறார்கள். என தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி